அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு
2022-11-21@ 16:04:40

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதி அமர்வு தீர்ப்பு அளித்ததை எதிர்த்து கட்சியின் ஒருங்கினைபாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் இரு நீதிபதிகள் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென அவர் கூறியிருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி அமர்வு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
அவர் அளித்த பதில் மனுவில் ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவை கட்சி முறைப்படி முறையாக நடத்தப்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுவது உண்மையில்லை என்றும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மட்டுமே அவர் வழக்கு தொடர்ந்துள்ளதாக தீர்மானங்களை பற்றி அவர் கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறியிருந்தார். எனவே ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் மனுவில் கூறியிருந்தார்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான் சூ துலியா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்; இந்த வழக்கை 2 வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களை பொருத்தவரையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
ஏனெனில் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த விவகாரம் என்பதால் 6 மாதங்கள் ஆகிறது. எனவே இந்த வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் ஓபிஎஸ் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
என்.எல்.சி.யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம்: பேரவையில் அமைச்சர் லெட்சுமி நாராயணன் அறிவிப்பு
ஆந்திராவில் வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய நபரை கைது செய்து போலீஸ் விசாரணை
அம்ரித்பால் தலைமறைவான இடத்தில் இருந்து வீடியோ வெளியீடு: கடவுள் அருளால் தப்பித்து வருவதாக பேச்சு
அறிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து ஒன்றிய அரசு அரசாணை..!!
தேசிய கீதம் அவமதிப்பு வழக்கு: மம்தாவுக்கு எந்தவிதக் கருணையும் காட்டக்கூடாது மும்பை ஐகோர்ட் உத்தரவு..!!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியது.... ஒரே நாளில் 14 பேர் பலி : ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!