தூத்துக்குடியில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்; தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு
2022-11-21@ 15:10:00

தூத்துக்குடி: தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஒன்றரை ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றி வரும் நிலையில் அனைத்து வாக்குறுதிகளையும் விரைவில் முழுமையாக நிறைவேற்றுவோம் என தூத்துக்குடியில் நடந்த இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்த திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ உறுதிப்பட தெரிவித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணாநகரில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, நிகிழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில் ‘‘தலைவர் ஏற்கனவே புதிதாக 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞர் அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியதின் அடிப்படையில் தொகுதிக்கு 10 ஆயிரம் வீதம் 25 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2ம் கட்டமாக இல்லம் தோறும் உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த 6 மாதங்களாக நடந்து வருகிறது. ஆண்டு முழுவதும் இந்த பணியை செய்ய வேண்டும். ஒன்றரை ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். விரைவில் முழுமையாக நிறைவேற்றுவோம் கடந்த 2019, 2021, தேர்தலில் நாம் பெற்ற வெற்றியை விட 2024ல் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும்.
அதற்கு இளைஞர் அணி முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கும். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். கடந்த காலத்தில் இளைஞர் அணி செயலாளராக இருந்த தலைவர் தான் தற்போது முதல்வராக உள்ளார். கழகப்பணியை முழுமையாக ஆற்றி முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’’ என்றார். இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்ந்த படிவத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, உள்ளிட்ட பலர் நேரில் வழங்கினர்.
மேலும் செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
கோவையில் துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகியிடம் போலீசார் தீவிர விசாரணை
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர் முகாம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்-முசிறி அருகே பரபரப்பு
கள்ளிக்குடி அருகே களப்பலி நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு
வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!