SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குலுங்கிய கட்டிடங்கள்!: இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்.. கட்டட இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பலி; 300 பேர் காயம்..!!

2022-11-21@ 15:07:59

ஜகார்த்தா: இந்தோனேசியா ஜாவா தீவில் நில நடுக்கம் ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பலியாகினார். நில அதிர்வால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளார். நில நடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 5.6-ஆக பதிவானது என புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பல வினாடிகளுக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஜாவா பகுதியில் இருந்து 75 கிலோ மீட்டர் தென்கிழக்கு பக்கமாக மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. நில நடுக்கம் ஏற்பட்டபோது, மகட்டிடங்கள் குலுங்கி உள்ளன.

இதனால் தனியார் மற்றும் அரசு அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் பதறியடித்துக்கொண்டு உடனடியாக வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர். சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக அங்குள்ள உள்ளூர் அதிகாரி ஒருவர்  கூறியுள்ளார்.  கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களில் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அங்கு மின்சாரம் தடைபட்டது.  

ஏராளமான வீடுகள் இருளில் தவித்து வருகின்றனர். இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எச்சம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. தீவு நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும். இந்தோனேசியாவில் தற்போது ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்