செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிர்வாகிகளுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை
2022-11-21@ 14:46:07

சென்னை: செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிர்வாகிகளுக்கு சொந்தமான சுமார் ரூ.3.37 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிர்வாகிகளுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டன.
ரூ.3.37 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. செஞ்சுலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிர்வாகிகளுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டன. செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிதிமுறைகேடு தொடர்பாக சிபிஐ கடந்த 2020-ம் ஆண்டு ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, நிதி நிறுவனம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இந்த வழக்கில் புலன் விசாரணையில் தமிழக கிளையின் தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன், முன்னாள் பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம்.நசுருதீன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது அவர்களுக்கு சொந்தமான ரூ.3.37 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
மதுரவாயல் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
திருவேற்காடு சாலையில் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை
மூவரசன்பட்டு ஊராட்சியில் ரூ.67.17 லட்சத்தில் வளர்ச்சி பணி: கிராமசபை கூட்டத்தில் முடிவு
போலீஸ் சிறப்பு தணிக்கையில் 7,195 வாகனங்கள் சோதனை: போதையில் ஓட்டியதாக 84 பேர் சிக்கினர்
இறைச்சிக்காக விஷம் வைத்து கொல்லப்பட்ட நீர் பறவைகள்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அருமந்தை கூட்டுச்சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!