புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைப்பு
2022-11-21@ 14:41:24

புழல்: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியதையடுத்து பலத்த மழை பெய்ததால் புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 2ம் தேதி முதல் ஏரியில் இருந்து 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்ததால் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ளதால் புழல் ஏரிக்கு தண்ணீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது. இதன் காரணமாக தற்போது புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 500 கன அடியில் இருந்து 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு ஒரு மதகின் வழியாக 100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது ஏரிக்கு வினாடிக்கு 166 கன அடி நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறது.
மொத்தம் 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2530 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ‘’மழை நிலவரம், ஏரிகளுக்கான நீர்வரத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் வெளியேற்றுவது அதிகரிப்பதும் குறைப்பதும் பற்றி முடிவு செய்யப்படும்’’ என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்
உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!