SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளிடம் பகுதியில் மழைநீரில் அழுகிய பயிர்களுக்கு மாற்றாக மறு சாகுபடி செய்ய முடியாமல் அவதி-விவசாயிகள் வேதனை

2022-11-21@ 12:26:43

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பருவமழையினால் சம்பா நெற்பயிர்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்த வரலாறு காணாத மிக அதிக மழையினாலும், கொள்ளிடம் ஆற்றில் 7 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதனால் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் தேங்கியுள்ள மழைநீர் எளிதில் கொள்ளிடம் ஆற்றில் சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டதாலும், நெற்பயிரில் தேங்கிய தண்ணீர் தொடர்ந்து 10 நாட்களாக வடிய முடியாமல் வயலிலேயே கடல் போல் காட்சி அளித்தன. இதனால் தண்ணீருக்குள் மூழ்கி இருந்த சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் தண்ணீருக்குள்ளேயே இருந்து முற்றிலும் அழுகின.

கொள்ளிடம் வட்டாரத்தில் மட்டும் சுமார் 13,000 எக்டேர் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 35 முதல் 40 நாட்கள் மட்டுமே ஆன நெற்பயிர் 90% அழுகிவிட்டது. அழுகிப்போன பயிர்களுக்கு பதிலாக இனி விவசாயிகள் அதே பயிரை மீண்டும் வளர செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் ஒரு ஏக்கருக்கு சாகுபடி செய்ய சுமார் 30,000 ரூபாய் வரை செலவிட்டு எந்தப் பயனும் இல்லாமல் உள்ளனர்.

ஒருமுறை அல்லது இரு முறை மழை பெய்து அதிக தண்ணீர் வயல்களில் தேங்கி ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் தண்ணீர் முற்றிலும் வடிந்துவிடும் என்பது இயற்கையான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் பெய்தமழை விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

இதுகுறித்து கொள்ளிடம் பகுதி தெற்கு ராஜன் வாய்க்கால் பாசன சங்க பொருளாளர் மீசை கலையரசன் கூறுகையில், கொள்ளிடம் பகுதியில் நன்கு செழித்து வளர்ந்து வந்த இளம் சம்பா நெற்பயிர் மழை வெள்ளத்தில் மூழ்கி முற்றிலும் அழிகி விட்டது. இதுவரை இப்படி கொள்ளிடம் பகுதியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டது கிடையாது. ஆனால் இந்த வருடம் விவசாயிகளை முற்றிலும் பாதித்துவிட்டது. விவசாயிகள் இனிமேல் என்ன செய்வது என்று நினைத்து வேதனையில் இருந்து வருகின்றனர்.

மீண்டும் நெற்பயிர் சாகுபடி செய்யும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டால் அது காலம் தவறி செய்கின்ற சாகுபடி ஆகும். மறு சாகுபடி செய்வதற்கு விவசாயிகளிடத்தில் முற்றிலும் பணம் இல்லாமல் இருந்து வருகின்றனர்.எனவே பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விதைநெல், உரம், பூச்சி மருந்துகள் மற்றும் அனைத்து இடுபொருட்களையும் நிவாரண தொகையையும் சேர்த்து வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்