SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐந்தாண்டுகளில் மட்டும் சென்னை பழவேற்காடு ஏரி பலிவாங்கிய 27 உயிர்கள்: தடுக்க நிரந்தர வழி காண வேண்டும்

2022-11-21@ 04:03:01

சென்னை: பொன்னேரி பகுதியில்  ஐந்து ஆண்டுகளில் 27 உயிரை பலி வாங்கிய பழவேற்காடு ஏரியில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயணிக்க வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்ைக வைத்துள்ளனர். சென்னை அடுத்துள்ளது பழவேற்காடு. இது, அழகிய சுற்றுலா பகுதியாகும். இங்கு டச்சுக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்திருந்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சியில் பக்கிங்காம் கால்வாய் தமிழ்நாட்டில் இருந்து பழவேற்காடு ஏரி வழியாக ஆந்திரா வரை தோண்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. நாளடைவில் பக்கிங்காம் கால்வாய் தூர்ந்துவிட்ட நிலையில் அதன் பாரம்பரியம் மறையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், 214 ஆண்டுகளுக்கு முன்னர் ஈஸ்ட் கோஸ்ட் கெனால் (ECC) எனப்படும். பக்கிங்காம் கால்வாய் பிரிட்டிஷ் அரசால் 1806ம் ஆண்டுவாக்கில் தோண்டப்பட்டது. சென்னை பேசின் பிரிட்ஜில் ஜீரோ மைல் என ஆரம்பித்து பழவேற்காட்டில்  25வது‌ மைல்கல்  வரை அது இருந்தது.

பழவேற்காடு மிகவும் பழமையும், பாரம்பரியமும் மிக்க பகுதியாகும் கி.மு.300 தொடங்கி 15ம் நூற்றாண்டு வரை ஒரு மிகப்பெரிய இயற்கை துறைமுகமாக இது விளங்கி வருகிறது. பழவேற்காடு புனித மகிமைமாதா திருத்தலம், புனித அந்தோனியார் ஆலயம், டச்சு கல்லறை, சின்னப்பள்ளி நிழற்கடிகாரம், கலங்கரைவிளக்கம், ஆதிநாராயணப்பெருமாள் கோயில், சமய ஈஸ்வரர் கோயில், ஜல்ரியா கோட்டை, கடற்கரை, முகத்துவாரம், பக்கிங்காம் கால்வாய், எடமணி ஜடராயன் கோயில், சிந்தாமணி ஈஸ்வரர் கோயில், பழவேற்காடு மேம்பாலம், தோணிரேவு படகு குழாம், திருப்பாலீஸ்வரர் கோயில், பழவேற்காடு பாலசுப்பிரமணியர் கோயில், பழவேற்காடு பறவைகள் சரணாலயம், பழவேற்காடு மீன் அங்காடி, வனத்துறை அலுவலகம், காளிகாம்பாள் கோயில், காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம், காட்டுப்பள்ளி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ஒரு வருடம் கெடாமல் தண்ணீரை பாதுகாக்கும் சீன பீங்கான் பானைகள்  என பல முக்கிய பார்வையிடும் இடங்களைக் கொண்டு விளங்குகின்றது.

இங்கு கோட்டைக் குப்பம், லைட் ஹவுஸ், தாங்கல் பெரும்புலம், பழவேற்காடு, அவுரிவாக்கம், கடப்பாக்கம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் கடலுக்கும் ஏறிக்கும் இடையே 36 மீனவ கிராமங்களில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் ஒரே வாழ்வாதாரமாக இருப்பது மீன் பிடி தொழில் ஆகும். இங்கிருந்து நாள் தோறும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட பழவேற்காடு பகுதிக்கு புதுவருட பொங்கல் தினம், தீபாவளி பண்டிகை, .கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கல்லூரி மாணவ மாணவிகள் காதல் ஜோடிகள், வாலிபர்கள், பொதுமக்கள் என அந்தந்த முக்கிய நாட்களில் இரு சக்கர வாகனங்களிலும் கார் வேன்களிலும் பழவேற்காடு பகுதிக்கு சென்று பார்ப்பது வருகை தருவது உண்டு.

பழவேற்காடு பகுதியில் சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லும் படகோட்டிகள் பாதுகாப்பு உபகரணங்கின்றி அழைத்து செல்வதால் இது போன்ற பரிதாப உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்ட காவல் துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து பல உத்தரவுகள் பிறப்பித்தும் பழவேற்காட்டில் தொடர் உயிர் பலி ஏற்பட்டு வருகிறது.

இது போன்ற நாட்களில் வெளியூர்களிலிருந்து வருபவர்கள், உயிரை பழிவாங்கும் கடலையும், ஏரியும் இணைக்கும் முகத்துவார் பகுதிக்கு அரசு தடை செய்யப்பட்ட பகுதி என பழவேற்காடு மேம்பால  நுழைவாயில் முன்பு பெயர் பலகை  வைத்தும் அதனை கண்டு கொள்ளாத சுற்றுலா பயணிகளும் படகு சவாரிகளும் பணத்திற்காக ஆசைப்பட்டு ஆபத்தான பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர். இதனை தடுக்க மீன்வளத்துறை, காவல்துறை, வருவாய் துறை ஆகியோர் ஒவ்வொரு  முறையும் பல அறிவிப்புகள் செய்தும் கடலில் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க முடியவில்லை. இந்த தடை செய்யப்பட்ட படகு சவாரியை நிரந்தரமாக தடை செய்தால் மட்டும் உயிர் பலியை தடுக்க முடியும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்