சிறையில் அமைச்சருக்கு மசாஜ் விவகாரம்: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்.! நாளைக்குள் பதிலளிக்க உத்தரவு
2022-11-20@ 17:55:55

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் சம்பவம் தொடர்பாக அமலாக்கத்துறை நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பணமோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ெடல்லி ஆம்ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் மசாஜ் வீடியோ நேற்று வெளியானது. அந்த வீடியோவில் சத்யேந்தர் ஜெயினுக்கு திகார் சிறையில் சிலர் மசாஜ் செய்கின்றனர். அவரது கால்களிலும், தலையிலும் வலி நிவாரணிகளை தடவி விடுகின்றனர். இந்த வீடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் திங்கள்கிழமை அதாவது நாளைக்குள் பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சிறையில் இருந்து வீடியோ வெளியானதை அடுத்து, அமலாக்க இயக்குனரகம் மீது சத்யேந்திர ஜெயின் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சத்யேந்தர் ஜெயின் வழக்கு தொடர்பான எந்த தகவலையும் ஊடகங்களில் கசிய விடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் அமலாக்கத்துறை சார்பில் சிறையில் சத்யேந்தர் ஜெயின் தொடர்பான வீடியோவை கசியவிட்டது. எனவே, அமலாக்க இயக்குனரகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார். அதையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி விகாஸ் துல், அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது: பிரதமர் மோடி ட்வீட்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை தொடங்கியது.! தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ‘பிஎப்ஐ’ மீதான தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை
டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
திருப்பதி அருகே போலீஸ் ரோந்து வனப்பகுதியில் வெட்டி கடத்திய 9 செம்மரக்கட்டைகள் பறிமுதல்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!