சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலிஸ்தானி தீவிரவாதி பாகிஸ்தானில் மரணம்: இந்திய உளவுத் துறை தகவல்
2022-11-20@ 17:06:44

புதுடெல்லி: பாகிஸ்தானில் பதுங்கியிருந்த காலிஸ்தானி தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தானி தீவிரவாத அமைப்பான ‘பாபர் கல்சா இன்டர்நேஷனல்’ அமைப்பின் உறுப்பினராக ஹர்விந்தர் சிங் ரிண்டா என்பவன் இருந்தான். இந்த ஆண்டு மே மாதம், மொஹாலியில் உள்ள பஞ்சாப் போலீஸ் உளவுத்துறை தலைமையகத்தில் ராக்கெட் புரொபல்டு க்ரெனேட் (ஆர்பிஜி) தாக்குதலின் பின்னணியில் ஹர்விந்தர் சிங் ரிண்டா பெயரும் இடம்பெற்றது.
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஹர்விந்தர் சிங் ரிண்டாவை இந்திய போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் ஹர்விந்தர் சிங் ரிண்டாவை கொன்றதாக பாம்பிஹா கும்பல் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளன. ஆனால் சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஹர்விந்தர் சிங் ரிண்டா இறந்ததாக புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன. இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த 15 நாட்களுக்கு முன்பு, ஹர்விந்தர் சிங் ரிண்டா பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி இறந்தான். பஞ்சாபின் டர்ன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங், இந்தியாவில் பல்வேறு குற்றங்களை செய்துவிட்டு, போலி பாஸ்போர்ட் மூலம் நேபாளம் வழியாக பாகிஸ்தானுக்கு தப்பிவிட்டான்.
2011ல் டர்ன் தரனில் நடந்த இளைஞன் கொலை வழக்கில் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2014ல் பாட்டியாலா மத்திய சிறை அதிகாரிகளை தாக்கி வழக்கு உள்ளது. இதுமட்டுமின்றி 2016 ஏப்ரலில் சண்டிகர் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கு, 2017ல் ஹோஷியார்பூர் பஞ்சாயத்து தலைவரை கொன்ற வழக்கு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஹர்விந்தர் சிங் ரிண்டாவுக்கு அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஆதரவு கொடுத்தது. இதுதவிர, பாகிஸ்தான் தீவிரவாத கும்பலுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக குற்றச்செயல்களையும் ஹர்விந்தர் சிங் ரிண்டா செய்து வந்தான். இந்த நிலையில் பல வழக்குகளில் தேடப்பட்ட அவன், பாகிஸ்தானில் இறந்தான்’ என்று கூறின.
மேலும் செய்திகள்
ராகுலுக்கு அரசு பெரிய மனதை காட்டியிருக்க வேண்டும்
எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
ராகுலுக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனைக்கு தடைபெறாதது ஏன்?: பாஜ கேள்வி
2 ஆண்டு சிறை… எம்பி பதவி பறிப்பு என்னவாகும் ராகுலின் அரசியல் எதிர்காலம்?: 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்
பிறந்த நாளில் உருக்கம் நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் காதல் கடிதம்
ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கிய ஊழல் சிபிஐ அலுவலகத்தில் தேஜஸ்வி ஆஜர்: சகோதரியிடமும் விசாரணை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி