மங்களூருவில் நேற்று நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல்: கர்நாடக டிஜிபி அறிவிப்பு
2022-11-20@ 11:22:56

மங்களூரு: மங்களூருவில் நேற்று நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல் என கர்நாடக டிஜிபி அறிவித்துள்ளார். மங்களூருவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் வெடிபொருள் நேற்று வெடித்து சிதறியது. குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த பெங்களூருவில் இருந்து தனிப்படை மங்களூரு விரைகிறது. ஆட்டோவில் பயணித்தவர் கொண்டு வந்த சாக்கு முட்டையிலிருந்து வெடிபொருள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகவில் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் ஆட்டோ முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஒரு பயணியும் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தபோது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துது. ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது குக்கர் வெடித்ததால் தீப்பிடித்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து கர்நாடக டிஜிபி தெரிவிக்கையில் இது ஒரு தீவிரவாத தாக்குதல் என தெரிவித்தார். ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது தற்செயலாக நடைபெற்ற விபத்து அல்ல எனவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது எனவும் கூறினார்.
மேலும் இது தொடர்பாக ஒன்றிய அரசின் விசாரணை ஆணையங்களுடன் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார். இது தவிர ஆட்டோ டிரைவர் மற்றும் பயணி இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10-ம் தேதி நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
பூதலப்பட்டு- நாயுடுப்பேட்டை இடையிலான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் உண்ணாவிரதம்-பலரது உடல்நிலை பாதிப்பு
ஆணையர் தலைமையில் பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி திட்ட பணிகளுக்கு ₹273.12 கோடி நிதி ஒதுக்கீடு-மேயர் அமுதா அறிவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ரூ.500 நோட்டுகளை வீசியெறிந்த காட்சிகள் வெளியீடு
ராகுல் காந்திக்கு வழிகாட்டுகிறதா ஐகோர்ட் தீர்ப்பு?.. காங்கிரஸ் கட்சி எம்.பி. முகமது ஃபைசலின் தகுதி நீக்க உத்தரவு ரத்து..!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!