டிடிவி தினகரன் பங்கேற்ற நிகழ்ச்சியில் நிவாரண உதவிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு
2022-11-20@ 01:04:17

செம்பனார்கோயில்: டிடிவி.தினகரன் பங்கேற்ற நிகழ்ச்சியில் நிவாரண பொருட்களை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாமாகுடி ஊராட்சி அப்பராஜபுரம்புத்தூர் கிராமத்தில் மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்த வயல்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பார்வையிட்டார். அப்போது அவரிடம் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை விவசாயிகள் காண்பித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் 200 பேருக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் போர்வை ஆகியவற்றை நிவாரண உதவியாக டிடிவி தினகரன் வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் அவர் சீர்காழி பகுதிக்கு சென்ற பின்னர், நிவாரண பொருட்களை பெற அப்பகுதியினர் முண்டியடிதபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கட்சி நிர்வாகிகள் நிவாரண பொருட்களை பொதுமக்கள் மத்தியில் தூக்கி வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:
DTV Dhinakaran programme relief aid thrown away டிடிவி தினகரன் நிகழ்ச்சி நிவாரண உதவி தூக்கி வீசியமேலும் செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்
வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு
வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!