கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும்: முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்
2022-11-20@ 00:59:09

சென்னை: கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் கே.செந்தில் நேற்று வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலில் மருத்துவ சிகிச்சையின்போது ஏற்பட்ட இறப்பில் பொதுவாக அந்த துறை மூத்த ஸ்பெஷலிஸ்ட் கருத்தை போலீஸ் பெற வேண்டும். அவ்வாறு மூத்த ஸ்பெஷலிஸ்ட் அந்த மரணத்தில் மருத்துவ சிகிச்சையின்போது கடும் கவனக்குறைவு இருக்கிறது என்று கூறினால் மட்டுமே காவல்துறை 304A பிரிவில் வழக்கு தொடர வேண்டும். அப்படி 304 A பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் டாக்டர்களை கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் மருத்துவர்களை கொலை குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடைய கூறி இருப்பது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.
இந்த நிகழ்வில் சிவில் கவன குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவர்கள் மீது எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. நோயாளியின் காலை, சிகிச்சை செய்யும் நோக்கில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, அதன் பின் கவனக்குறைவில் உயிர் சேதம் ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும் அது சிவில் நெக்லி ஜென்சில் மட்டுமே வரும். போலீஸ் நடவடிக்கை அதிகப்படியானது மருத்துவர் செவிலியர் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரானது என்று சங்கம் கருதுகிறது. எனவே மருத்துவர் மீது பதியப்பட்ட 304ஏ பிரிவு மாற்றப்பட வேண்டும்.
அதையும் மீறி மருத்துவர் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது. தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்பட்டது. சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்பட்டது.
Tags:
Football player deceased case disciplinary action to Chief Minister Government Medical Association கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரம் ஒழுங்கு நடவடிக்கை முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் சங்கம்மேலும் செய்திகள்
தனிப்பட்ட அதிகாரம் என்ற தலைப்பில் 50 லட்சத்தை ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளளனர்: ஆளுநர் மாளிகை மீது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் தாக்கு..!!
தமிழகத்தில் நேற்று நடந்த 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் பேர் ஆப்சென்ட்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் நடைமேடை தடுப்பு கதவுகள்: சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்யும் போது திடீரென தீப்பற்றிய மாநகராட்சி வாகனம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!