கால்பந்து வீராங்கனை பிரியா மரணவழக்கில் தலைமறைவான மருத்துவர்களை பிடிக்க துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைப்பு
2022-11-19@ 09:13:15

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் மருத்துவர்கள் தலைமறைவாகியுள்ளனர். மருத்துவர்களை பிடிக்க கொளத்தூர் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர். ஒவ்வொரு தனிப்படையும் ஆய்வாளர் தலைமையில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ந்தேக மரணம் என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கனது கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் மாற்றப்பட்டது.
சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என போலீசார் கூறியிருந்த நிலையில், முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மருத்துவர்கள் மனு தாக்கல் செய்தனர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மருத்துவர்கள் சோமசுந்தர், பால்ராம் ஆகியோர் தலைமறைவாகினர். இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள மருத்துவர்களை பிடிக்க கொளத்தூர் காவல் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படையும் ஆய்வாளர் தலைமையில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!