பெண் ஆசையில் மயங்கி பாக்.கிற்கு உளவு சொன்ன வெளியுறவு ஊழியர் கைது
2022-11-19@ 01:06:34

புதுடெல்லி: பாகிஸ்தான் உளவு அமைப்பு பெண்களை காட்டி விரித்த வலையில் (ஹனி டிராப்) வலையில் சிக்கி, உளவு தகவல்களை கூறிய வெளியுறவு அமைச்சக டிரைவர் கைது செய்யப்பட்டார். டெல்லி ஜவகர்லால் நேரு பவனில் ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலகம் உள்ளது. இதில் பணிபுரிந்து வந்த வாகன ஓட்டுனர் ஒருவர், தேச பாதுகாப்பு விஷயங்கள், ரகசிய ஆவணங்கள் சம்பந்தமான விவரங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ.யில் உள்ள ஒரு நபருக்கு அளித்துள்ளார். ஐஎஸ்ஐ நபர் பெண்ணை போல் பேசி நடித்து வெளியுறவு ஊழியரிடம் இந்த தகவல்களை பெற்று உள்ளார். ஐஎஸ்ஐ.க்கு ரகசிய தகவல்களை அவர் பகிர்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஹனி டிராப்பில் வெளியுறவு அமைச்சக பணியாளர் மாட்டிக் கொண்டார். அவரிடம் இருந்து ஐஎஸ்ஐ தொடர்புடைய பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன,’ என்றன.
Tags:
Female desire Pakistan spying foreign worker arrested பெண் ஆசை பாக். உளவு வெளியுறவு ஊழியர் கைதுமேலும் செய்திகள்
அப்போ 109.5, இப்போ 70.69 டாலர் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்காதது ஏன்?: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு மீண்டும் அமல்
ஜாமீனுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் டெல்லி சிறை கைதிகளுக்கு ரூ. 5.11 கோடி வழங்க தயார்: மோசடி மன்னன் சுகேஷ் கடிதம்
பாகிஸ்தான், ஆப்கானில் பூகம்பத்தால் 12 பேர் பலி: 160 பேர் காயம்
6ஜி ஆராய்ச்சி, மேம்பாடு சோதனை மையம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பதற்றத்தை உருவாக்குவதோடு போலி செய்திகளால் ஜனநாயகத்திற்கு ஆபத்து: தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரிக்கை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!