குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மூச்சு திணறி பலி: உறவினர்கள் போராட்டம்
2022-11-19@ 00:55:17

தாம்பரம்: குரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் இன்குபேட்டரில் வைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பச்சிளம் குழந்தை மூச்சு திணறி பலியானதால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் அடுத்த திருநீர்மலை, இரட்டைமலை சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் பாரதி (எ) மகேந்திரன், கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி (எ) ஆஷா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை, பிரசவத்திற்காக கடந்த சில் நாட்களுக்கு முன், குரோம்பேட்டை அரசு மருத்துவனையில் அனுமதித்தனர்.
அங்கு, கடந்த புதன்கிழமை ஆனந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் இன்குபேட்டரில் வைத்து, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுபற்றி அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியப்போக்குதான் காரணம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மருத்துவமனை வளாகம் வெளியே ஜிஎஸ்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அங்கிருந்து கலைய செய்தனர். இதனைதொடர்ந்து, குரோம்பேட்டை மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் தந்தை பாரதி (எ) மகேந்திரன், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த, சம்பவத்தால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
* மருத்துவர் விளக்கம்
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் தலைமை டாக்டர் பழனிவேல் கூறுகையில், ‘‘மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான, விசாரணை நடத்தி அலட்சியத்தில் குழந்தை இறந்திருந்தால், கண்டிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என தெரிவித்தார்.
Tags:
Chrompet Govt Hospital Newborn Suffocation Victim Relatives Struggle குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பிறந்த குழந்தை மூச்சு திணறி பலி உறவினர்கள் போராட்டம்மேலும் செய்திகள்
அரசு பேருந்து மோதி மகன் கண் முன் தாய் பரிதாப பலி
கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து மை பூசி அழிப்பு: மர்ம நபருக்கு வலை
கோயம்பேட்டில் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் ரகளை
துப்பு துலங்காத கொலைகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் காவல் படை: சென்னை கமிஷனர் அதிரடி
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு
மூத்த குடிமக்கள் வசதிக்காக வேளச்சேரி பேபி நகரில் ரேஷன் கடை: அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!