SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜீவனாம்ச வழக்கில் ஆஜர், கோர்ட்டில் மனைவியைப் பார்த்த மாஜி அதிகாரி திடீர் மரணம்; திருச்சியில் பரபரப்பு

2022-11-18@ 15:19:58

திருச்சி: ஜீவனாம்ச வழக்கில் ஆஜராக வந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி, நீதிமன்றத்தில் மனைவியைப் பார்த்ததும் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(63), ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி. இவர்  மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி, ஜீவனாம்சம் கேட்டு திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது.

இதில் ஆஜராக தியாகராஜனும் அவர் மனைவியும் வந்திருந்தனர். இந்நிலையில், தியாகராஜன் நீதிமன்ற வாசலில் திடீரென மயங்கி விழுந்தார். தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.ஜீவனாம்சம் கேட்ட நிலையில் கணவர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்