கணவன் கொலை வழக்கில் இளம்பெண், காதலனுக்கு ஆயுள் சிறை: சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
2022-11-18@ 01:44:44

சென்னை: தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரத்தை சேர்ந்தவர் வினோதினி (எ) அனிதா (26). இவரும் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்த அந்தோணி ஜெகனும் (24) காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு வலுத்தது. இந்தநிலையில் வினோதினிக்கு கடந்த 2018 செப்டம்பர் 12ம் தேதி தூத்துக்குடியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கதிரவனுடன் திருமணம் நடந்தது. இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். ஆனால், வினோதினிக்கும் அந்தோணி ஜெகனுக்கும் உள்ள உறவு தொடர்ந்தது.
கடந்த 2018 அக்டோபர் 12ம் தேதி கணவன் கதிரவனை திருவான்மியூர் கடற்கரைக்கு வினோதினி அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் கண்ணை துணியால் கட்டி கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடியுள்ளனர். கதிரவன் கண்ணைக் கட்டிக்கொண்டு கண்ணாமூச்சி விளையாடியபோது ஏற்கனவே சென்னைக்கு வினோதினியால் வரவழைக்கப்பட்ட அந்தோணி ஜெகன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கதிரவனை வெட்டியுள்ளார். இதனால் நிலைகுலைந்து கதிரவன் கீழே விழுந்தவுடன் அந்தோணி ஜெகனிடம் தனது தாலியை கழற்றி கொடுத்து அங்கிருந்து ஓடிவிடும்படி வினோதினி கூறியுள்ளார். அந்தோணி ஜெகனும் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர், தனது தாலியை பறித்துக்கொண்டு கணவனை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி விட்டதாக வினோதினி சத்தம் போட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் கதிரவனை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கதிரவன் இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் கடற்கரையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது வினோதினியும் அவரது காதலனும் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் கொலை மற்றும் கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தங்க மாரியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு வழக்கறிஞர் எ.கோவிந்தராஜன் ஆஜராகி சாட்சிகளிடம் விசாரணை நடத்தி சிசிடிவி பதிவு உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் வினோதினி மற்றும் அந்தோணி ஜெகன் ஆகியோருக்கு இரு பிரிவுகளிலும் தலா ஒரு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
வேளச்சேரி தனியார் விடுதியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது
நாகப்பட்டினத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல் 3 பேர் கைது
காரை மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து பல லட்சம் மோசடி செய்த பெண் கைது; 7 கார் பறிமுதல்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி