ஆர்.கே.நகர் அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை இன்று கடைசி: கல்லூரி முதல்வர் தகவல்
2022-11-18@ 01:27:49

தண்டையார்பேட்டை: ஆர்.கே.நகர் அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை இன்றுடன் முடிவடைகிறது, என்று கல்லூரி முதல்வர் சுடர்கொடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.கே.நகர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சுடர்கொடி வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சேணியம்மன் கோயில் தெருவில், ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் சுமார் 1,900 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு பி.காம் (சி.எஸ்), பி.எஸ்.சி (கணிணி அறிவியல்), பி.எஸ்.சி (கணிதம்), பி.ஏ.(தமிழ்), பி.ஏ.(ஆங்கிலம்), பி.பி.ஏ ஆகிய 6 பாட பிரிவுகள் ஆங்கில வழியிலும், பி.காம். (பொது), பி.ஏ. (பொருளாதாரம்) ஆகிய பாட பிரிவுகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியிலும் கற்பிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு வகுப்பிலும் தலா 60 இடங்கள் (பி.எஸ்.சி. கணிணி அறிவியல் மட்டுட்டும் 50 இடங்கள்) என மொத்தம் 590 மாணவர்களை இந்த ஆண்டு சேர்த்திட அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த படிப்புகளில் முதலாம் ஆண்டுக்கான விண்ணப்பம் கடந்த ஜூன் 22 முதல் ஜூலை 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், என அரசு அறிவித்தது. அரசு வெளியிட்டுள்ள www.tngasa.in அல்லது www.tngasa.org என்ற இணையத்தள முகவரிகளில் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணம் ரூ.50-ஐ நெட் பேங்கிங், வங்கி டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தலாம் எனவும், பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது என்றும், அரசு விதிமுறைப்படி இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அரசு அறிவித்து. அதன்படி மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துவிட்டது.
இந்நிலையில், தமிழக அரசு உத்தரவுபடி 12ம் வகுப்பு துணை தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் பயன்பெறும் வகையில், இந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை இன்று (18ம் தேதி) கடைசி நாள் எனவும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
குளித்தலை தொகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நினைவுச் சின்னம்: அமைச்சர் சாமிநாதன் தகவல்
தனிப்பட்ட அதிகாரம் என்ற தலைப்பில் 50 லட்சத்தை ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளனர்: ஆளுநர் மாளிகை மீது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் தாக்கு..!!
தமிழகத்தில் நேற்று நடந்த 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் பேர் ஆப்சென்ட்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் நடைமேடை தடுப்பு கதவுகள்: சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!