ஏழை மக்கள் பயனடையும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
2022-11-18@ 00:09:25

சென்னை: சென்னை பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்தில், 69வது கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பதிவாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, நிதியுதவிகளை வழங்கினர். பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவுத் துறை சார்பில் வழங்கப்பட்ட நகை கடனை தள்ளுபடி செய்தார். அதேபோல் மகளிர் சுயஉதவி குழுவிற்கு வழங்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்யவும் உத்தரவிட்டார். கூட்டுறவு துறைக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்து வருகிறார். இதன்மூலம், மகளிர் சுயஉதவி குழுக்களும், ஏழை மக்களும் பெரிதும் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:
Poor People Chief Minister M.K.Stalin Department of Cooperatives Minister P.K. Shekharbabu Speech ஏழை மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சுமேலும் செய்திகள்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்யும் போது திடீரென தீப்பற்றிய மாநகராட்சி வாகனம்..!!
நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலுபதில்
அம்பத்தூர் பால் பண்ணையில் இயந்திர கோளாறு காரணமாக பால் அனுப்ப கால தாமதம்: அதிகாரிகள் பணியிடைநீக்கம்
நெல்லையில் ஐபிஎஸ் அதிகாரி கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்..!!
EPS-க்கு மீண்டும் செக் வைத்த OPS : அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!