மதுரையில் நடைபெற்ற கல்விக்கடன் திருவிழாவில் 291 மாணவர்களுக்கு ரூ.18.51 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது: சு.வெங்கடேசன் எம்.பி
2022-11-17@ 17:09:55

மதுரை: மதுரையில் நடைபெற்ற கல்விக்கடன் திருவிழாவில் 291 மாணவர்களுக்கு ரூ.18.51 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரையில் நவம்பர் 13-ம் தேதி மதுரை மாவட்ட நிர்வாகமும் வங்கிகள் நிர்வாகமும் இணைந்து அமெரிக்கன் கல்லூரியில், உயர்கல்வி பயிலும் மதுரை மாவட்ட மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் நடை பெற்றது.
இம்முகாமில் 1,500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் உயர்கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க வருகை தந்திருந்தனர். இவர்களில் தகுதியான 1,002 நபர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான உரிய தகுதிகள் அடிப்படையில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் வழியாக 900 மாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
இம்முகாமில் கல்விக்கடன் பெற விண்ணப்பித்துள்ள மாணவர்களில் மொத்தமாக 291 மாணவர்களுக்கு ரூ.18.51 கோடி முகாமில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மாபெரும் கல்விக்கடன் முகாமில் வணிகவரி- பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி-மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமை வகித்தார். சு.வெங்கடேசன் எம்.பி., கூடுதல் ஆட்சியர் சரவணன் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் ஆகியோர் உரையாற்றினர். இந்நிலையில், இந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில் பல வங்கிகள் கலந்துக்கொண்ட நிலையில், எச்.டி.எஃப்.சி வங்கிக் கலந்துக்கொள்ளவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எச்.டி.எஃப்.சி வங்கியில் இந்த நடவடிக்கைக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எம்.பி தலைமையில் நடைபெற்ற DISHA குழுவில், தமிழக மாணவர்களுக்குக் கடன் கொடுக்க மறுத்த எச்.டி.எஃப்.சி வங்கியில், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கல்விக்கடன் மேளாவில் பங்கெடுக்க மறுத்தும் கல்விக்கடன் தர மறுக்கும் எச்.டி.எஃப்.சி வங்கியில் ஏன் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை தேசிய வங்கிகளுக்கு மாற்றப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எங்கள் மாணவர்களுக்கு கல்விக்கடன் தரமறுக்கும் வங்கிகளில் அரசின் பணம் ஏன் டெபாஸிட் செய்யப்பட வேண்டும். மதுரை - கல்விக்கடன் மேளாவில் பங்கெடுக்காத தனியார் வங்கியில் அரசு செய்துள்ள டெபாஸிட் தொகையை திரும்பப்பெறுவோம். எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை குமரி பாதிரியார் பாளை மத்திய சிறைக்கு மாற்றம்: ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாம்
படிக்காததை கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி
புதுச்சேரியில் நீர்தேக்க தொட்டி மீது ஏறி அரசு ஊழியர்கள் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்: பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்
கீழடி அருங்காட்சியகம் மெக்சிகோ தூதர் வியப்பு: பழம்பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்
எண்ணெய் கசிவு பாதிப்பை ஆய்வு செய்யக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மக்கள் செல்ல விடாமல் கட்டுப்பாடுகள் கொடநாடு பாதை பிரச்னை எஸ்டேட் வக்கீல் விடுதலை: 16 ஆண்டு வழக்கில் குன்னூர் நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி