ஆலந்தூர் தொகுதி திமுக சார்பில் பரணிபுத்தூரில் 20-ம் தேதி நடக்கும் இளைஞரணி பயிற்சி பாசறையில், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்
2022-11-17@ 15:41:27

ஆலந்தூர்: ஆலந்தூர் தெற்கு பகுதி 163, 165, 166 ஆகிய வார்டுகளின் சார்பில், நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி, மாணவர் அணிகளின் அவசர ஆலோசனை கூட்டம் ஆதம்பாக்கம், பழவந்தாங்கல் பகுதிகளில் நடந்தது. ஆதம்பாக்கத்தில் 165வது வார்டில் சார்பில் நடந்த கூட்டத்திற்கு வட்டசெயலாளர் கே.ஆர். ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். 166வது வட்ட சார்பில் பழவந்தாங்கலில் நடந்த கூட்டத்திற்கு இ.உலகநாதன் தலைமை வகித்தார்.
மாநகராட்சி கவுன்சிலர் பூங்கொடி ஜெகதீஸ்வரன், வட்ட அவை தலைவர்கள் கு.விஜயன், ஏழுமலை, கங்காதரன் மற்றும் சதாசிவம், பி.ஆர்.சுரேஷ், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளரும் மண்டல குழு தலைவருமான என்.சந்திரன் கலந்துகொண்டு பேசுகையில், “ஆலந்தூர் தொகுதி சார்பில் இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டம் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தா.மோ. அன்பரசன் தலைமையில் வரும் 20ம்தேதி பரணிபுத்தூரில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, திராவிட இயக்க வரலாறு குறித்து பயிற்சி வகுப்பு நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அனைவரும் இளைஞரணி சீருடை அணிந்து கலந்துவேண்டும். திமுக வரலாறு பற்றி இளைஞர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்” என்றார்.
கூட்டத்தில், குழு உறுப்பினர் எம்.எஸ்.கே.இப்ராகிம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஆர்.பாபு, ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் ஜி.ரமேஷ், கோ.பிரபாகரன், வெள்ளைச்சாமி, வேல்முருகன், மாரிமுத்து, என்.பெருமாள், ஆர்.கிறிஸ்டோபர், சுதாகர், மணிகண்டன், சேகர், கேபிள் ராஜா, விஜய் பாபு, ராஜேஷ், விக்னேஷ், வினோத், அஜித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்