நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது விக்ரம்
2022-11-17@ 01:20:24

புதுடெல்லி: நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட்டான விக்ரம்- எஸ் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்வெளி துறையில் பல சாதனைகளை புரிந்து வருகிறது. விண்வெளித்துறையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்த நாடுகளுக்கு இணையாக விண்வெளி துறையில் வளர்ச்சி அடைய இந்தியாவில் தனியார் துறையின் பங்களிப்பு முக்கியம். நாட்டில் பல தனியார் நிறுவனங்கள் விண்வெளி துறையில் இறங்கி உள்ளன. அதில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் விக்ரம் எஸ் என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளின் பங்கெடுப்பால் வளர்ச்சி கண்டு வரும் ஸ்கைரூட், தனது முதல் விண்வெளி பயணத்தை துவங்க தயாராகி வருகிறது.
இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் தந்தையான விக்ரம் சாராபாய் நினைவாக, இந்த ராக்கெட்டுக்கு விக்ரம்-எஸ் னெ பெயரிடப்பட்டு உள்ளது. இந்த வரிசையில் தொடர்ந்து பல ராக்கெட்டுகளை ஸ்கைரூட் ஏவ இருக்கிறது. விக்ரம்-எஸ் ராக்கெட்டைத் தொடர்ந்து விக்ரம் வரிசையின் அடுத்த 3 ராக்கெட்டுகள் அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 3 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன், நாளை (18ம் தேதி) காலை 11.30 மணிக்கு விக்ரம்-எஸ் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது.
மேலும் செய்திகள்
ராகுலுக்கு அரசு பெரிய மனதை காட்டியிருக்க வேண்டும்
எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
ராகுலுக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனைக்கு தடைபெறாதது ஏன்?: பாஜ கேள்வி
2 ஆண்டு சிறை… எம்பி பதவி பறிப்பு என்னவாகும் ராகுலின் அரசியல் எதிர்காலம்?: 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்
பிறந்த நாளில் உருக்கம் நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் காதல் கடிதம்
ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கிய ஊழல் சிபிஐ அலுவலகத்தில் தேஜஸ்வி ஆஜர்: சகோதரியிடமும் விசாரணை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி