பிச்சாட்டூர் ஏரி திறக்காதது ஏன்?: நீர்வளத்துறை அதிகாரிகள் விளக்கம்
2022-11-16@ 16:02:38

ஊத்துக்கோட்டை: தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள பிச்சாட்டூர் ஏரியில் தண்ணீர் திறக்காதது ஏன் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த 2021ம் வருடம் நவம்பர் மாதம் ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது.
இந்த ஏரியின் கொள்ளளவு 32 அடி, கடந்தாண்டு பெய்த பெருமழை காரணமாக ஏரி நிரம்பியதையடுத்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் ஆந்திர பகுதியில் எதிர்பார்த்தபடி மழை பெய்யாததால் பிச்சாட்டூர் ஏரி தற்போது வரை முழு கொள்ளளவை எட்டவில்லை. தற்போது 24 அடி உயரம் தண்ணீர் இருப்பு உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பகுதியில் கனமழை பெய்தால் பிச்சாட்டூர் ஏரி நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு மழை செய்யும் பட்சத்தில் 30 முதல் 31 அடி வரை தண்ணீர் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருவேளை கனமழை பெய்து பிச்சாட்டூர் ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டால் ஆரணி ஆற்றின் கரையோரத்தில் விவசாயிகள் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து மகிழ்ச்சி அடைவார்கள்.
மேலும் செய்திகள்
கடல் கடந்தும் தமிழர்கள் போர்வெல் போடுகிறார்கள்... இந்தியாவை திரும்பிப் பார்க்க வைக்கும் திருச்செங்கோடு ரிக் இயந்திர வண்டிகள்
ஓசூர் அருகே மாந்தோப்பில் 5 யானைகள் முகாம்; பொதுமக்கள் பீதி
திருவையாறு அருகே பாலம் கட்ட குழிதோண்டியபோது 3 சாமி சிலை கண்டெடுப்பு
மேலூர் அருகே நெடுஞ்சாலையோரம் எரிக்கப்படும் குப்பைகள்: புகையால் பாதிக்கப்படும் பொதுமக்கள்
வாகன ஓட்டிகளை குறிவைத்து சாக்கரீன் கலந்த பதநீர் விற்பனை: வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம்
ஏப்ரல் 4 ல் பங்குனி உத்திர தெப்போற்சவம்; குளித்தலை அய்யர்மலை கோயில் தெப்பக்குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம்: தெப்போற்சவ மண்டபத்தில் வர்ணம் பூசப்பட்டது
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!