SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் பலி: மற்றொருவர் சீரியஸ்

2022-11-16@ 01:45:27

சென்னை: திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்த அன்பு மகன் சரவணன் (32). இவர், மாநில அளவில் நடந்த ஆணழகன் போட்டியில், மிஸ்டர் தமிழ்நாடு என்ற பதக்கம் வென்றவர். மாவட்ட ஆணழகன் போட்டியில் 5 முறை வெற்றி பெற்றவர். திருவள்ளூரில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில், நேற்று தண்ணீர்குளத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அதேபோல், திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு கிராமத்தை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் நாகராஜ் (26), தனது பைக்கில் காக்களூர் வழியாக ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காக்களூர் தொழிற்பேட்டை அருகே சரவணன் ஓட்டி வந்த பைக்கும், நாகராஜ் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஜிம் பயிற்சியாளர் சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாகராஜ் ஆபத்தான நிலையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்