மைசூருக்கு 1966ல் எடுத்துச்செல்லப்பட்ட 20,000 தமிழ் கல்வெட்டுகள் சென்னை வந்தது: நீதிமன்ற உத்தரவு அமல்
2022-11-16@ 01:26:39

சென்னை: தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கல்வெட்டியல் துறையிடம் உள்ளது. சென்னை அலுவலகத்தில் இருந்த தமிழக கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள், உதகமண்டலத்துக்கு மாற்றப்பட்டன. அங்கிருந்து 1966ம் ஆண்டு மைசூருக்கு தமிழ் கல்வெட்டுகள் எடுத்துச்செல்லப்பட்டன. ஆனால், அவை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று பலரும் குற்றம்சாட்டிவந்தனர்.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த மணிமாறன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள், மைசூரில் உள்ள கல்வெட்டியல் துறையில் உள்ள தமிழ்மொழி தொடர்பான கல்வெட்டுகளை தமிழக தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் கல்வெட்டியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் ஆணைப்படி, தமிழ் கல்வெட்டுகளின் முதல் பகுதி, சுமார் 20,000 கல்வெட்டு படிகள் மைசூர் மத்திய கல்வெட்டு துறையிலிருந்து சென்னைக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.
அதன்படி, சென்னை, எழும்பூரில் உள்ள மத்திய தமிழ் கல்வெட்டு அலுவலகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், நீண்டகால போராட்டத்திற்கு பின் கல்வெட்டுகள் சென்னை வந்ததையடுத்து சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். மேலும், 65 ஆயிரம் கல்வெட்டு படிகள் தமிழில் உள்ளன. அவைகளிலிருந்து தான் தற்போது சென்னைக்கு முதற்கட்டமாக 20,000 ஆயிரம் கல்வெட்டு படிகள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
குளித்தலை தொகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நினைவுச் சின்னம்: அமைச்சர் சாமிநாதன் தகவல்
தனிப்பட்ட அதிகாரம் என்ற தலைப்பில் 50 லட்சத்தை ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளனர்: ஆளுநர் மாளிகை மீது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் தாக்கு..!!
தமிழகத்தில் நேற்று நடந்த 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் பேர் ஆப்சென்ட்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் நடைமேடை தடுப்பு கதவுகள்: சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!