படகுகளுடன் பிடித்து வைத்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: இரவு முழுவதும் துன்புறுத்தியதாக புகார்
2022-11-16@ 00:31:59

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். ஒரு வார இடைவெளிக்குப் பின் கடலுக்கு சென்றதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். இரவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை வழிமறித்து தாக்கி விரட்டியடித்தனர். பின்னர் 3 விசைப்படகுகளை பிடித்த கடற்படையினர், இரவு முழுவதும் நிறுத்தி வைத்து மீனவர்களை அடித்து துன்புறுத்தினர். பல மணி நேரத்திற்கு பின் அவர்களை விடுவித்தனர். இவர்கள் நேற்று காலை கரை சேர்ந்தனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதல், விரட்டியடிப்பு சம்பவத்தால் ராமேஸ்வரம் மீனவர் படகுகளில் மீன்பாடு மிகவும் குறைவாக இருந்தது. ஒரு வாரத்திற்கு பின் கடலுக்கு சென்ற நிலையில், இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலால், மீன்வரத்து குறைந்ததால் மீனவர்கள் கவலையடைந்தனர்.
Tags:
Boat Rameswaram fishermen Sri Lanka Navy attack படகு ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதல்மேலும் செய்திகள்
கடல் கடந்தும் தமிழர்கள் போர்வெல் போடுகிறார்கள்... இந்தியாவை திரும்பிப் பார்க்க வைக்கும் திருச்செங்கோடு ரிக் இயந்திர வண்டிகள்
ஓசூர் அருகே மாந்தோப்பில் 5 யானைகள் முகாம்; பொதுமக்கள் பீதி
திருவையாறு அருகே பாலம் கட்ட குழிதோண்டியபோது 3 சாமி சிலை கண்டெடுப்பு
மேலூர் அருகே நெடுஞ்சாலையோரம் எரிக்கப்படும் குப்பைகள்: புகையால் பாதிக்கப்படும் பொதுமக்கள்
வாகன ஓட்டிகளை குறிவைத்து சாக்கரீன் கலந்த பதநீர் விற்பனை: வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம்
ஏப்ரல் 4 ல் பங்குனி உத்திர தெப்போற்சவம்; குளித்தலை அய்யர்மலை கோயில் தெப்பக்குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம்: தெப்போற்சவ மண்டபத்தில் வர்ணம் பூசப்பட்டது
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!