ஆட்டோ, ஆம்னி பஸ்களுக்கான பர்மிட் கட்டணம் உயர்கிறது: போக்குவரத்து துறை முடிவு
2022-11-16@ 00:31:33

சென்னை ஆட்டோ, டாக்சி, ஆம்னி பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து மோட்டர் வாகனங்களுக்கான பர்மிட் கட்டணம், புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்த போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மோட்டர் வாகன விதிகள் 1989-ன்படி, அனுமதி வழங்குதல், அனுமதிகளைப் புதுப்பித்தல், அனுமதி பத்திரங்களை மாற்றுதல் மற்றும் அனுமதியை புதுப்பிப்பதற்கான காலதாமதமான விண்ணப்பங்கள் போன்ற சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கான வரைவுத் திருத்தத்தை போக்குவரத்து துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம், ஆட்டோ, வாடகை கார், தனியார் ஆம்னி பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கான பர்மிட், புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 177% வரை கட்டணம் உயர வாய்ப்புகள் உள்ளன. இதுவரை, மோட்டார் வாகன வரி, கற்றோர் உரிமப் பதிவு (எல்எல்ஆர்) கட்டணம், ஓட்டுநர் உரிமக் கட்டணம் மற்றும் துறையின் முக்கிய வருவாய் ஆதாரங்களாக இருக்கும் சில கட்டணங்கள் மற்றும் வரிகளை அரசாங்கம் திருத்தவில்லை.
இதுகுறித்து சி.ஐ.டி.யூ மாநில செயல் தலைவர் பாலசுப்ரமணியம் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அமலில் உள்ள அபராத கட்டணம் உயர்த்தப்பட்டு அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் பர்மிட், புதுப்பித்தல் உள்ளிட்ட போக்குவரத்து துறை சேவைக்களுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமிடுவது என்பது ஆட்டோ தொழிலை மேலும் நசுக்கும் செயலாகும். மேலும், தமிழகத்தில் ஒன்றிய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கும் செயல். 9 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ பர்மிட், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 30 ஆயிரம் செலவாகும். ஆனால் இப்போது ரூ.60 ஆயிரம் வரை ஆகிறது. மேலும், 2013ம் ஆண்டு மீட்டர் கட்டணத்தின்படி தான் பொதுமக்களிடம் பணம் பெற்று வருகிறோம். இதுவரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூல் செய்து வருகிறோம்.
அதனை அரசு பரிசீலித்து கட்டணத்தை கூடுதலாக நிர்ணயம் செய்யும் பட்சத்தில் வரவேற்க தயாராக உள்ளோம். மாறாக கட்டணம், அபராதம் மட்டும் அதிகரிக்கப்படுவது வேதனையளிக்கிறது. எனவே, அரசு இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல், தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் கூறியிருப்பதாவது: ஆம்னி பேருந்து தொழில் என்பது தற்போது மிகவும் நலிவடைந்துள்ள நிலையில், போக்குவரத்து துறை மேலும் சேவைக்கட்டணங்களை அதிகரிப்பது என்பது கடினமாக உள்ளது. மேலும், ஒரு புறம் ஒன்றிய அரசு டீசல், சுங்க கட்டணம், இருக்கை மீதான வரி, உதிரி பாகங்கள் விலை உயர்வு போன்றவற்றால் உரிமையாளர்கள் நஷ்டத்தை தாங்கி வருகிறோம். இந்த சூழலில் பர்மிட், புதுப்பித்தல் கட்டண உயர்வது மேலும் இத்தொழிலை நசுக்குவதாக அமையும். இவ்வாறு கூறினார்.
வாகனங்களுக்கான பர்மிட் கட்டணம் விவரம்
வாகனங்கள் பழைய கட்டணம் புதிய கட்டணம்
பயணிகள் வாகனம் ரூ.1,500 ரூ.3,000
பஸ்,சரக்கு வாகனம் ரூ.1,200 ரூ.3,000
வேன்கள் ரூ.750 ரூ.1,500
ஆட்டோக்கள் ரூ.300 ரூ.400
டாக்சி ரூ.525 ரூ.1,100
ஆம்னி பேருந்து ரூ.1,500 ரூ.5,000
புதுப்பித்தல் வாகனங்களுக்கான புதிய கட்டண விவரம்
வாகனம் பழையது புதியது
ஆட்டோக்கள் ரூ.160 ரூ.325
டாக்சி ரூ.415 ரூ.600
ஆம்னி பேருந்து ரூ.900 ரூ.2,500
Tags:
Auto Omni Bus Permit Fee Transport Department ஆட்டோ ஆம்னி பஸ் பர்மிட் கட்டணம் போக்குவரத்து துறைமேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!