இந்தியா உட்பட உலகளவில் விந்தணுக்கள் எண்ணிக்கை கடும் சரிவு: மனித குலத்திற்கே ஆபத்து
2022-11-16@ 00:31:17

புதுடெல்லி: இந்தியா உட்பட உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் கடுமையான சரிவு ஏற்பட்டு வருவதாக சர்வதேச ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு தீர்வு காணாவிட்டால், மனித குலத்திற்கு ஆபத்தாகும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மற்றும் அதன் செறிவு தொடர்பான சர்வதேச ஆய்வு முடிவு, ஹூயுமன் ரீபுரொடெக்ஷன் அப்டேட் எனும் மருத்துவ இதழில் நேற்று வெளியானது. இந்த ஆய்வு 53 நாடுகளில், 57,000 ஆண்களிடம் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் ஹடாசா பிரான் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் பேராசிரியர் ஹகாய் லெவின் தலைமையில் நடந்த இந்த ஆய்வில் டென்மார்க், பிரேசில், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வை நடத்தி உள்ளனர்.
இவர்கள் முதல் முறையாக தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள ஆண்களின் விந்தணுக்களை மதிப்பாய்வு செய்துள்ளனர். இதில், இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும், விந்தணுக்களின் செறிவும் மிகப்பெரிய சரிவை கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் விந்தணுக்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளில் சரிவு எண்ணிக்கை இரண்டு மடங்காக இருந்துள்ளது. அதாவது, 1973 முதல் 2018ம் ஆண்டு வரை விந்தணுக்களின் எண்ணிக்கை சராசரியாக 1.2 சதவீதம் குறைந்துள்ளது.
இதுவே 2000ம் ஆண்டுக்குப் பின் ஆண்டிற்கு 2.6 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியை கண்டுள்ளது. இதை நம்பவே முடியவில்லை எனக்கூறி உள்ள பேராசிரியர் லெவின், தொற்றுநோயைப் போல உலகம் முழுவதும் விந்தணு எண்ணிக்கை சரிவு பரவியிருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். விந்தணுக்கள் எண்ணிக்கை சரிவிற்கான காரணம் இந்த ஆய்வில் ஆராயப்படவில்லை என்றாலும், கருவில் இருக்கும் போதே இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சியில் ஏற்படும் இடையூறுகள் முக்கிய காரணியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாறுபட்ட வாழ்க்கை முறை, ரசாயனங்கள் ஆகியவையும் விந்தணு குறைவிற்கு காரணமாகும் என கூறப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், குழந்தை பிறப்புகள் குறைந்து, மனித குலத்திற்கே ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ள ஆய்வாளர்கள் இதுதொடர்பான உலகளாவிய நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆண்களே உஷார்!
* உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, ஒரு மிலி விந்துவில் 15 லட்சம் விந்தணுக்கள் இருக்க வேண்டும்.
* விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருந்தாலும் கூட கரு உருவாவதில் சிக்கல் உண்டாகும்.
* விந்தணுக்கள் குறைவது, குழந்தை பிறப்பை பாதிப்பது மட்டுமின்றி, ஆண்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும். நாள்பட்ட நோய் மற்றும் ஆயுட்காலம் குறைவதற்கும் வழிவகுக்கும். எனவே விந்தணுக்களை அதிகரிப்பதற்கான உணவுகளை ஆண்கள் அவசியம் உட்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Tags:
India Globally Sperm Count Decline Threat to Humanity இந்தியா உலகளவில் விந்தணுக்கள் எண்ணிக்கை சரிவு மனித குலத்திற்கே ஆபத்துமேலும் செய்திகள்
அப்போ 109.5, இப்போ 70.69 டாலர் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்காதது ஏன்?: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு மீண்டும் அமல்
ஜாமீனுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் டெல்லி சிறை கைதிகளுக்கு ரூ. 5.11 கோடி வழங்க தயார்: மோசடி மன்னன் சுகேஷ் கடிதம்
பாகிஸ்தான், ஆப்கானில் பூகம்பத்தால் 12 பேர் பலி: 160 பேர் காயம்
6ஜி ஆராய்ச்சி, மேம்பாடு சோதனை மையம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பதற்றத்தை உருவாக்குவதோடு போலி செய்திகளால் ஜனநாயகத்திற்கு ஆபத்து: தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரிக்கை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!