ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் சிட்சிபாசை வீழ்த்தினார் ஜோகோவிச்
2022-11-15@ 15:37:48

டுரின்: இத்தாலியின் டுரின் நகரில் நடந்து வரும் நிட்டோ ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் குரூப் ஸ்டேஜ் பிரிவில் நடந்த போட்டியில், முன்னாள் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் 6-4, 7-6 என நேர் செட்களில் சிட்சிபாசை வீழ்த்தினார். ஏடிபி தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள டென்னிஸ் வீரர்கள் மோதும், நிட்டோ ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டிகள், இத்தாலியின் டுரின் நகரில் நடந்து வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த குரூப் ஸ்டேஜ் பிரிவு போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரரான செர்பியாவின் டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச்சும், தற்போது ஏடிபி தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ் சிட்சிபாசும் மோதினர். ஜோகோவிச் தற்போது தரவரிசையில் 8ம் இடத்தில் உள்ளார்.
முதல் செட்டில் இருவருமே நிதானமாக ஆடினர். இருப்பினும் செகண்ட் சர்வீஸ்களில் சிட்சிபாசின் கவனம் முழுவதும் பந்தை பிளேஸ் செய்வதிலேயே இருந்தது. அதனால் செகண்ட் சர்வீஸ்களில் அவர் அடித்த வேகம் குறைவான பந்துகளை, சாமர்த்தியமாக எதிர்கொண்டு, சைட் லைன்களில் துல்லியமாக அடித்து, ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தினார். இதையடுத்து முதல் செட் 6-4 என ஜோகோவிச் வசமானது.2வது செட்டில் இருவருமே விட்டுக் கொடுக்காமல் போராடினர். தங்களது கேம்களை தக்க வைத்துக் கொண்டனர். இதனால் அந்த செட் டை பிரேக்கர் வரை நீடித்தது. டை பிரேக்கரில் தனது மொத்த அனுபவத்தையும் பயன்படுத்தி, 2வது செட்டை 7-6 என ஜோகோவிச் கைப்பற்றி, சிட்சிபாசை வீழ்த்தினார்.
முன்னதாக நேற்று இரவு நடந்த மற்றொரு குரூப் ஸ்டேஜ் பிரிவு போட்டியில் ஏடிபி தரவரிசையில் 5ம் இடத்தில் உள்ள ரஷ்யாவின் டேனில் மெட்வடேவும், 8ம் இடத்தில் உள்ள ரஷ்யாவின் இளம் வீரர் ஆண்ட்ரே ரப்லேவும் மோதினர். மிகவும் விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் ஆண்ட்ரே ரப்லேவ் 6-7, 6-3, 7-6 என 3 செட்களில் கடுமையாக போராடி, மெட்வடேவை வீழ்த்தினார்.இந்திய நேரப்படி இன்று மாலை நடைபெறும் குரூப் ஸ்டேஜ் பிரிவு போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை எதிர்த்து, கனடாவின் இளம் வீரர் பெலிக்ஸ் ஆகர் அலியாசைம் மோதுகிறார்.
மேலும் செய்திகள்
பதக்கம் உறுதி
தங்கம் சுட்டார் சரப்ஜித்
சில்லி பாயின்ட்...
ஷ்ரேயாஸ் அய்யருக்கு அறுவை சிகிச்சை
21 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 270 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!