SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வண்ண மீன்களை பிடிக்க முயன்றபோது விபரீதம் மீன்தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி: சோகத்தில் மூழ்கியது அம்பத்தூர்

2022-11-15@ 00:46:59

சென்னை: வண்ண மீனை பிடிக்க முயன்ற ஒன்றரை வயது குழந்தை, தவறி அதே தொட்டியில் தலைகுப்புற விழுந்து உயிர இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூர் வெங்கடாபுரம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (32). பிளம்பர். இவரது மனைவி கவுசல்யா (23). இவர்களுக்கு ஒன்னறை வயதில் மீனாட்சி என்ற மகள் இருந்தார். யுவராஜ், நேற்று முன்தினம் பிளம்பர் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் கவுசல்யா மற்றும் குழந்தை மீனாட்சி ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் கவுசல்யா தன் வீட்டில் வண்ண மீன்களை வளர்த்து வந்தார். மீன் தொட்டியை வைக்க வீட்டில் மேஜை இல்லாத காரணத்தால், வீட்டின் ஒரு மூலையில் உள்ள தரையில் ைவத்துள்ளனர்.

இந்நிலையில் கவுசல்யா, குழந்தை மீனாட்சியை தனியாக விட்டுவிட்டு பாத்ரூமுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஒன்னறரை வயது குழந்தையான மீனாட்சி தவழ்ந்து சென்று மீன் தொட்டியை எட்டி பிடித்து நின்றார். அப்போது தொட்டிக்குள் இருந்த வண்ண மீன்கள் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் செல்வதை பார்த்தார். எனவே, தொட்டியில் உள்ள மீனை பிடிக்க குனிந்தார். அப்போது கால் தடுமாறி தலைகுப்புற மீன் தொட்டிக்குள் விழுந்துவிட்டார். ஒன்னறை வயது குழந்தையான மீனாட்சிக்கு எப்படி வெளியே வருவது என்பது தெரியாமல் தண்ணீரில் தலையும், தொட்டிக்கு மேலே காலும் இருந்தது. இதனால் மூக்கின் வழியே தண்ணீர் சென்றதால், மூச்சு திணறி அதே மீன் தொட்டியில் இறந்து கிடந்தார்.

இந்நிலையில் பாத்ரூமிற்கு போய் சில நிமிடங்களில் வெளியே வந்த கவுசல்யா தன் மகள் மீனாட்சியை வீடு முழுக்க தேடி உள்ளார். ஆனால், குழந்தை வீட்டில் உள்ள மீன் தொட்டியில் தலைகுப்புற கவிழ்ந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை மீன் தொட்டியில் இருந்து எடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். அங்கே குழந்தையை பரிசோதித்த எழும்பூர் அரசு மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நேற்று அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி வழக்கு பதிந்து விசாரிக்கிறார். பெரிய அளவிலான தொட்டியில் உள்ள வண்ண மீனை பார்த்து சந்தோஷப்பட்டு வந்த குழந்தை மீனாட்சி, அதே தொட்டியில் தன் உயிரை இழந்ததும், குழந்தைகள் கைக்கு எட்டும் வகையில் மீன் தொட்டியை வைத்ததும், அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்