மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான காப்பீடு தேதியை 30ம் தேதி வரை நீடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
2022-11-15@ 00:02:49

சென்னை:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கொளப்பாக்கம் கணேஷ் நகர் பகுதியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் நகர் மணப்பாக்கத்தில் சுமார் 500 வீடுகள் கன மழையால் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். இப்போது மழை கொஞ்சமாகதான் பெய்துள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்கி 10 நாட்கள்தான் ஆகியுள்ளது. கனமழை பெய்யவில்லை. அந்த அளவுக்கு மழை இருந்தால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கபடுவார்கள்.
அதிமுக ஆட்சியில் கடந்த 10 வருடத்தில் எந்த பணியும் செய்யவில்லை என்று அமைச்சர்கள் சொல்வதாக கேட்கிறீர்கள். அமைச்சர்கள் திட்டமிட்டு பொய் பேசுகிறார்கள். நான் சொன்ன நிதியை யாரும் மறைக்க முடியாது. அதிமுக ஆட்சியில் டெண்டர் வைத்தோம். அதனை ரத்து செய்து விட்டார்கள். அதில்தான் சிங்கார சென்னை, 2-0 என்று அறிவித்துள்ளார்கள். திமுக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று, பாதிப்புகளை கணக்கிட்டு, காப்பீட்டு திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு சேரவேண்டிய பெற்று தருவதோடு, மாநில அரசும் ஒரு தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். காப்பீடு 15ம் தேதி (இன்றோடு) நிறைவு பெறுவதாக தெரிவித்துள்ளார்கள். அதனை வருகிற 30ம் தேதி வரை நீடிக்க வேண்டும் என்றார்.
Tags:
Edappadi Palaniswami Rains Farmers Insurance Date to extend till 30th மழை விவசாயி காப்பீடு தேதி 30ம் தேதி வரை நீடிக்க எடப்பாடி பழனிசாமிமேலும் செய்திகள்
நாடு முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி : நாடாளுமன்றம் 12வது நாளாக முடங்கியது: மக்களவை ஏப்ரல் 3 வரை ஒத்திவைப்பு!!
சபாநாயகருடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை..!
கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் : ராகுலின் வயநாடு தொகுதிக்கும் இன்று தேர்தல் அறிவிப்பா?
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது!!
பதவி பறிபோக காரணமான கோலாரில் ஏப்.5ல் ‘சத்தியமேவ ஜெயதே’ ராகுல் பிரசாரம் தொடக்கம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!