கோயம்பேடு பஸ் நிலையத்தில் கணவரை சரமாரியாக தாக்கி மனைவியிடம் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை
2022-11-15@ 00:02:16

அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலையத்தில் கணவரை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது மனைவியிடம் 5 சவரன் செயினை பறித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் கோட்டை கருப்பசாமி (30). இவரது மனைவி அனு (25). கடந்த சில தினங்களுக்கு முன் சொந்த ஊரான தேனி மாவட்டத்துக்கு அனு சென்றார். பின்னர், நேற்று முன்தினம் ஊரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தார். அவரை அழைத்து செல்வதற்காக, கணவர் கோட்டை கருப்பசாமி வந்திருந்தார்.
அப்போது, அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த 3 பேர், அனுவிடம் தகராறு செய்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோட்டை கருப்பசாமி ஓடிச்சென்று 3 பேரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள், கோட்டை கருப்பசாமியை சரமாரியாக தாக்கினர். பின்னர், கத்திமுனையில் அனு அணிந்திருந்த 5 சவரன் நகை, பர்சில் வைத்திருந்த ₹7,000ஐ பறித்துக்கொண்டு பைக்கில் ஏறி தப்பிச்சென்றனர். புகாரின்படி, கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, பயணிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சமீபகாலமாக குற்றச்சம்பவங்கள் குறைந்து வந்த நிலையில் மீண்டும் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பெண்கள் தனியாக நடந்துசென்றால் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன்களை பறித்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இங்கு கணவர் கண்முன்னே மனைவியை தாக்கி வழிப்பறி நடந்துள்ளது மற்ற பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே, போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். வழிப்பறி ஆசாமிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
Tags:
Koyambedu bus station husband assaulted wife jewelry snatched கோயம்பேடு பஸ் நிலைய கணவரை தாக்கி மனைவி நகை பறிப்புமேலும் செய்திகள்
வேளச்சேரி தனியார் விடுதியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது
நாகப்பட்டினத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல் 3 பேர் கைது
காரை மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து பல லட்சம் மோசடி செய்த பெண் கைது; 7 கார் பறிமுதல்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி