திருவள்ளூர் அருகே இன்று அதிகாலை குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலி: மனைவி, பேரன் படுகாயம்: தூங்கிக்கொண்டிருந்தபோது சோகம்
2022-11-14@ 15:36:04

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் தேவன் (67). கூலி தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள் (60). இவர்கள் ஓலையால் வேயப்பட்ட மண் குடிசையில் வசித்து வருகின்றனர். நேற்றிரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தேவன், முனியம்மாள் மற்றும் பேரன் சுமித் ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் தேவன் வீட்டின் மண் சுவர், ஈரப்பதமாக இருந்தது. இன்று அதிகாலையில் 3 பேரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.
அந்த நேரத்தில் திடீரென குடிசை வீட்டின் சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த தேவன், முனியம்மாள், சுமித் ஆகியோர் மீது விழுந்தது. இதில் அவர்கள் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளை அகற்றி பார்த்தனர். தேவன், உடல் நசுங்கி இறந்து கிடந்தார். முனியம்மாள், சுமித் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
இருவரையும் மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தகவலறிந்து கடம்பத்தூர் எஸ்ஐ சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மதுரவாயல் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
திருவேற்காடு சாலையில் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை
மூவரசன்பட்டு ஊராட்சியில் ரூ.67.17 லட்சத்தில் வளர்ச்சி பணி: கிராமசபை கூட்டத்தில் முடிவு
போலீஸ் சிறப்பு தணிக்கையில் 7,195 வாகனங்கள் சோதனை: போதையில் ஓட்டியதாக 84 பேர் சிக்கினர்
இறைச்சிக்காக விஷம் வைத்து கொல்லப்பட்ட நீர் பறவைகள்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அருமந்தை கூட்டுச்சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!