ஈரோடு மாவட்டம் காசிபாளையம் காந்தி நகரில் பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவன் மீது வேன் கவிழ்ந்ததில் மாணவன் பலி
2022-11-14@ 15:29:13

ஈரோடு : ஈரோடு மாவட்டம் காசிபாளையம் காந்தி நகரில் பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவன் மீது வேன் கவிழ்ந்ததில் அவர் உயிரிழந்தார். மேலும், வேனில் சுற்றுலா சென்று திருப்பிய 7 கல்லூரி மாணவர்களும் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கோபிச்செட்டி பாளையம் அடுத்துள்ள காந்திநகரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி முருகேசன் என்பவர் மகன் கவினேஷ். இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல காந்திநகர் பேருந்து நிலையத்தில் கவினேஷ் பேருந்துக்காக காத்திருந்து நின்று கொண்டிருந்தார்.
அப்போது சேலம் மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வேன் ஈரோடு மாவட்டத்தில் காந்திநகர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது சுற்றுலா வேன் முன்பு வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பின் வந்த வேன் ஓட்டுநர் சதிஷ் இருசக்கர வாகனம் மீது வேன் மோதாமல் இருக்க பிரேக் போட்டுள்ளார். அப்போது பிரேக் போட்டதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த கவினேஷ் மீது கவிழ்ந்தது. இதில் வேனிற்கு அடியில் மாட்டிக்கொண்ட கவினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கவினேஷ் உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள்
இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை குமரி பாதிரியார் பாளை மத்திய சிறைக்கு மாற்றம்: ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாம்
படிக்காததை கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி
புதுச்சேரியில் நீர்தேக்க தொட்டி மீது ஏறி அரசு ஊழியர்கள் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்: பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்
கீழடி அருங்காட்சியகம் மெக்சிகோ தூதர் வியப்பு: பழம்பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்
எண்ணெய் கசிவு பாதிப்பை ஆய்வு செய்யக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மக்கள் செல்ல விடாமல் கட்டுப்பாடுகள் கொடநாடு பாதை பிரச்னை எஸ்டேட் வக்கீல் விடுதலை: 16 ஆண்டு வழக்கில் குன்னூர் நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி