3 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
2022-11-14@ 02:14:31

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த புளியம்பட்டியில், கடந்த மே 19ம் தேதி, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியாக வந்த நவீன்(எ)நவீன்சக்கரவர்த்தி (25), சஞ்சய்பிரகாஷ் (25) ஆகியோரிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களுக்கு உதவிபுரிந்த கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கபிலர்(எ) கபிலன் என்பவரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் துப்பாக்கிகள் மற்றும் வீரப்பன், பிரபாகரன் ஆகியோரின் புத்தகங்கள் இருந்ததால், இவ்வழக்கை சேலம் கியூ பிரிவுக்கு மாற்றினர்.
இந்த வழக்கு கடந்த ஜூலை 27ம் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்ட 3 பேரின் வீடுகளில், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கைதான 3 பேர் மீதும், என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து துப்பாக்கி தயாரித்த 3பேர் மீதும், என்ஐஏ அதிகாரிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மின் கம்பம் முறிந்து தலையில் விழுந்தது மின்சாரம் பாய்ந்து காட்டுயானை பலி
ரூ.7 லட்சத்தை பறிகொடுத்தார் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவமனை ஊழியர் தற்கொலை: திருச்சி அருகே சோகம்
அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலம் தமிழ்நாடு: நெல்லையில் குஜராத் அமைச்சர் புகழாரம்
தூத்துக்குடி ஆவின் உதவி பொதுமேலாளர் திடீர் சஸ்பெண்ட்
தீர்ப்புகள் மொழி பெயர்ப்பில் சென்னை ஐகோர்ட் முதலிடம்: பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி