திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு
2022-11-14@ 01:39:19

திருவொற்றியூர்: வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததையொட்டி கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திருவொற்றியூர், மாதவரம் போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இவ்வாறு தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மின் மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். மேலும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தற்காலிக கால்வாய்களை வெட்டி குடியிருப்புகளை சுற்றி இருக்கும் மழைநீரை அப்புறப்படுத்துகின்றனர்.
இந்த பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார். மாதவரம் ரெட்டேரி அருகே அண்ணாநகர், கணபதி நகர் இளங்கோ நகர் ஆகிய பகுதிகளில் மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த அவர், அங்கு நடைபெறும் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து வடக்கு மண்டல வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை ஆணையர் பிரசாந்த் ஆகியோரிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் மாநகராட்சி நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அவருடன் மழைக்கால சிறப்பு அதிகாரி ஸ்ரீதர், கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய பல்வீர் சிங்கை கொலை முயற்சி வழக்கின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்..!
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து ஐகோர்ட் உத்தரவு
திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில், ஜாதி மோதல்கள், ரவுடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
காவல்நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களை அரசு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
பரிந்துரைக்கப்பட்ட தகவல் தொடர்பு வழியை கடந்து புகார் தெரிவிக்கும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: ஜிப்மர் நிர்வாகம் எச்சரிக்கை
அதிமுக நிர்வாகி கொலை வழக்கு குறித்து புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!