SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவான்மியூரில் நாளை மறுநாள் தாமஸ்மலை ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் மேடவாக்கம் ப.ரவி மகள் திருமணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்

2022-11-12@ 17:09:12

வேளச்சேரி: திருவான்மியூரில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மேடவாக்கம் ப.ரவி-மேடவாக்கம் ஊராட்சி தலைவர் சிவபூஷணம் ரவி ஆகியோரின் மகள் திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார். தென் சென்னை மாவட்டம், தாமஸ் மலை தெற்கு ஒன்றிய திமுக முன்னாள் செயலாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலரும், மேடவாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான மேடவாக்கம் ப.ரவி- மேடவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சிவபூஷணம்  ஆகியோரது மகள் டாக்டர் ஆர்.நர்மதா மற்றும் தாம்பரம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர கழக அவைத்தலைவருமான கோ.காமராஜ்-காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் கலைவாணி ஆகியோரது மகன் டாக்டர் ஜி.கே.அரவிந்ராஜ் ஆகியோர் திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள  ராமச்சந்திரா கன்வென்ஷன் திருமண மண்டபத்தில் நாளை மறுநாள் (14ம் தேதி) காலை 9 மணியளவில் நடக்கிறது. முன்னதாக 13ம் தேதி மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லக்ஷ்மன் ஸ்ருதி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்குகிறார். விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், ஐ.பெரியசாமி, எஸ்.ரகுபதி எஸ்.ராஜ கண்ணப்பன், பி.செந்தில் பாலாஜி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சு.முத்துசாமி, பி.கீதா ஜீவன் மற்றும் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், கனிமொழி, ஆ.ராசா, தமிழச்சி தங்கப்பாண்டியன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், டி.எஸ்.வி.செந்தில்குமார், பொன்.கௌதம் சிகாமணி, ஏ.கே.பி.சின்ராஜ், தனுஷ், எம்.குமார், மு.சண்முகம், பி.வில்சன், கனிமொழி சோமு, திருச்சி என்.சிவா,

கலாநிதி வீராசாமி, பி.வேலுசாமி, ஜி.செல்வம், கே.சுந்தரம், சி.என்.அண்ணாதுரை, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ மற்றும் எம்எல்ஏக்கள் கே.சுந்தரம், எஸ்.அரவிந்த் ரமேஷ், எஸ்.ஆர்.ராஜா, காரப்பாக்கம் கணபதி, ஏ.வி.எம்.பிரபாகர்ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், ரமேஷ், எழிலரசன் மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் கே.வசந்தகுமாரி மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்துகின்றனர். நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் தொகுதி, மேடவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திமுகவினர், நண்பர்கள்  மற்றும் உறவினர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தும்படி ஒன்றிய கவுன்சிலரும் தலைமை பொதுக்குழு உறுப்பினருமான மேடவாக்கம் ப.ரவி- சிவபூஷணம் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்