சிறுத்தை உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வனத்துறை விசாரணைக்கு தேனி எம்.பி. ரவீந்திரநாத் ஆஜர்..!!
2022-11-12@ 11:46:40

தேனி: சிறுத்தை உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வனத்துறை விசாரணைக்கு தேனி எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராகியுள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதியை ஒட்டி ரவீந்திரநாத் எம்பிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி இவரது தோட்டத்தில் 2 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை உயிரிழந்தது. வனத்துறை நடத்திய விசாரணையில், ஆட்டுக்கிடை அமைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இருப்பினும் தோட்ட உரிமையாளர் என்ற அடிப்படையில் ரவீந்திரநாத் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், ரவீந்திரநாத் எம்.பி.க்கு வனத்துறை சார்பாக நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. முதற்கட்டமாக அனுப்பப்பட்ட சம்மனில் ரவீந்திரநாத் எம்.பி. ஆஜராகவில்லை. மாற்றாக வழக்கறிஞர் மூலம் தனது விளக்கத்தை கடிதம் மூலமாக அனுப்பி இருந்தார். கடந்த ஒருவாரத்திற்கு முன்பு வனத்துறை சார்பில் 2ம் முறையாக நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் தேனியில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி முன்னிலையில் ரவீந்திரநாத் ஆஜராகியுள்ளார்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் கொள்ளை: 3 பேரை கைது செய்தது தனிப்படை.. 62 சவரன் நகை பறிமுதல்..!
துவங்கியது கோடைகாலம்: பழநி பகுதியில் மண்பானை விற்பனை ‘விறுவிறு’
பெரியகுளம் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் நெல்மணிகள்: நெல் குடோன்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தேவதானப்பட்டி பகுதி மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து அதிக மகசூலை அள்ளலாம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை ‘அட்வைஸ்’
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது..!!
சின்னச்சுருளி அருவியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: சுற்றுலா பயணிகள் வேதனை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!