உர கொள்ளைக்கு உடந்தை காங். எம்எல்ஏ மீது வழக்கு: மபி போலீஸ் நடவடிக்கை
2022-11-12@ 00:39:36

ரத்லாம்: மத்தியப் பிரதேசத்தில் விநியோக மையத்தில் இருந்து உரத்தை கொள்ளையடிப்பதற்கு உதவியதாக காங்கிரஸ் எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள அரசு உர விநியோக மையத்தில் இருந்து உரம் கிடைக்கவில்லை என்று அலாட் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் சாவ்லாவிடம் விவசாயிகள் புகார் கொடுத்தனர். அது பற்றி தட்டி கேட்பதற்காக மனோஜ் அந்த உர மையத்துக்கு விரைந்தார்.
‘இணையதள கோளாறு காரணமாக ஆன்லைனில் உரத்தை விநியோகிக்க முடியவில்லை,’ என்று அவரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். ஆனால், இதை ஏற்க மறுத்த மனோஜ், உர மூட்டைகள் இருந்த அறையின் கதவை உடைத்து திறந்தார். அங்கு இருந்த உர மூட்டைகளை எடுத்து செல்லும்படி விவசாயிகளிடம் தெரிவித்தார். இதனால், விவசாயிகளும் உர மூட்டையை தூக்கிச் சென்றனர். இது தொடர்பாக உர மையத்தின் பொறுப்பாளர் கொடுத்த புகாரின் பேரில், உர கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக எம்எல்ஏ மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை மறுத்து மனோஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘வழக்கை கண்டு பயப்படமாட்டேன். தொடர்ந்து விவசாயிகளுக்காக போராடுவேன்,” என்றார்.
Tags:
Fertilizer Robbery Complicity Cong. MLA Case Mabi Police உர கொள்ளை உடந்தை காங். எம்எல்ஏ வழக்கு மபி போலீஸ்மேலும் செய்திகள்
விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 384 அத்தியாவசிய மருந்துகளின் விலை 11% உயர்வு: ஏப். 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
நீதிமன்றம் தண்டனையை அறிவித்த பின்னர் ராகுலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது யார்? காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றிய அமைச்சர் கேள்வி
வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும்: பிரகலாத் ஜோஷி நம்பிக்கை..!
மனைவி தொடுத்த குடும்ப வன்முறை வழக்கில் கிரிக்கெட் வீரரின் கைது வாரண்ட் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விருபாக்சப்பாவுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு தரக் கூடாது: பெங்களூரு பாஜக அலுவலகம் முன்பு போராட்டம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!