பரம்பிக்குளம் அணையில் புதிய ஷட்டர் அமைக்கும் பணி தீவிரம்: பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு
2022-11-11@ 19:06:00

ஆனைமலை: பரம்பிக்குளம் அணையில் புதிய ஷட்டர் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பாரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திற்குட்பட்ட(பிஏபி) கேரள எல்லையில் அமைந்துள்ள 72அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையில், தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் கடந்த செப்டம்பர் 21ம் தேதி அதிகாலை அணையில் உள்ள இரண்டாவது மெயின் ஷட்டர் உடைந்தது. இதன் காரணமாக, ஆயிரகணக்கான கன அடி தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து, பரம்பிக்குளம் அணையில் போர்கால அடிப்படையில் புதிய ஷட்டர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரூ.7.20 கோடியில் இரும்பாலான புதிய ஷட்டர் அமைக்கும் பணி 3 வாரத்துக்கு முன்பு துவங்கப்பட்டது.
திருச்சியிலிருந்து கொண்டுவரப்பட்ட ராட்சத இரும்பு தளவாட பொருட்களை கொண்டு, 27அடி உயரம் 45அடி அகலத்தில் புதிய ஷட்டர் அமைக்கும் பணியை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த வாரம் முதல், அணையின் இரண்டாவது கண் பகுதியில், ராட்சத கிரேன் மூலம் ஷட்டர் பொறுத்தும் பணியும், இணைப்புக்கு வெல்டிங் அடிக்கும் பணியும் இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் சுமார் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி இன்னும் 2 வாரங்களில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்
வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு
வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!