SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடப்பு சாம்பியன் பிரான்ஸ்: உலக கோப்பை அணியை அறிவித்தது

2022-11-11@ 00:58:10

பாரிஸ்: கத்தார் தலைநகர் தோஹாவில்  பிஃபா கால்பந்து உலக கோப்பை நவ.20ம் தேதி தொடங்குகிறது. அதில் பங்கேற்க உள்ள குரேஷியா உட்பட ஒவ்வொரு நாடாக  தங்கள் அணிகளை அறிவிக்க தொடங்கியுள்ளனன. இந்நிலையில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், உலக கோப்பைக்கான தனது அணியை அறிவித்துள்ளது. பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ்  முன்னிலையில் நடந்த உலக கோப்பைக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற 26 வீரர்களில், 25 பேர் அந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் கேப்டனும் கோல் கீப்பருமான ஹ்யூகோ லோரிஸ், நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே, அனடோயின் கிரீஸ்மேன், கூடுதல் கோல்கீப்பர் ஸ்டீவ் மண்டாண்டா உட்பட 11 பேர் 2018ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணிக்காக விளையாடியவர்கள்.

இவர்களை தவிர இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த வீரருக்கான பாலன் டி’ஒர் விருதை வென்ற கரீம் பென்சிமா 2014ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பையில் விளையாட உள்ளார். இடையில் பிளாக்மெயில் குற்றச்சாட்டு தொடர்பாக 5 ஆண்டுகள் அணியில் இருந்து பென்சிமா நீக்கப்பட்டு இருந்தார். பிரான்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள எல்லா வீரர்களும் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபல கால்பந்து கிளப்களுக்காக விளையாடி வரும் முன்னணி வீரர்கள்.
பிரான்ஸ் தனது முதல் லீக் ஆட்டத்தில் நவ.22ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்