புரளிகளை நம்ப வேண்டாம் திருப்பதி லட்டு எடை குறைக்கப்படவில்லை: திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
2022-11-11@ 00:18:37

திருமலை: சமூக வலைதளத்தில் வரும் தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம் என்றும், திருப்பதி கோயில் லட்டு எடை குறையாமல் 160-180 கிராம் வரை இருக்கிறது என்று தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டுகள் தேவை என்றால் ஒரு லட்டு ரூ.50 என விற்கப்படுகிறது. இந்த லட்டின் எடை குறைத்திருப்பதாக பக்தர் ஒருவர் வீடியோ வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு தேவஸ்தான நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. லட்டு பிரசாதம் 160 கிராம் முதல் 180 கிராம் வரை இருக்கும். தினமும் லட்டு தயாரிக்கும் பணியில் உள்ள ஊழியர்கள் தயாரித்த லட்டுகள் தனித்தனி தட்டுகளில் வைக்கின்றனர். பின்னர், ஒவ்வொரு தட்டும் எடை போட்டு அதிகாரிகள் மூலம் சரிபார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்தே, லட்டு பிரசாதங்கள் கவுன்டர்களுக்கு கொண்டு சென்று பக்தர்களுக்கு வழங்கப்படும். எனவே, முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படுகிறது. லட்டு எடை சரியாக 160 முதல் 180 கிராம் வரை இருக்கும். லட்டு பிரசாதம் பல நூறு ஆண்டுகளாக மிகுந்த பக்தியுடன் தயாரிக்கப்படுகிறது. லட்டுகளின் எடை மற்றும் தரத்தில் தேவஸ்தானம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை. சமூக வலைதளங்களில் வரும் தவறான கருத்துகளை பக்தர்கள் நம்ப வேண்டாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வெறுப்பு பேச்சு முடிவுக்கு வர அரசியலில் மதத்தை பயன்படுத்த கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை
நாளை மறுநாள் முதல் 1000 மருந்துகள் விலை 11% உயர்கிறது
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்: வன பாதுகாப்பு திருத்த மசோதா தாக்கல்
வெளிநாடுகளில் இருந்து தமிழ் நாடு என்ஜி ஓக்களுக்கு 3 ஆண்டில் ரூ. 6804 கோடி நிதி: ஒன்றிய அரசு தகவல்
கூகுளுக்கு ரூ. 1,337 கோடி அபராதம்: கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு
கிரிமினல் வழக்கில் உயர் நீதிமன்ற தடை எதிரொலி லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் வாபஸ்: மக்களவை செயலகம் அறிவிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!