விதிகளை பின்பற்றி அரசு பணி நியமனங்கள்: புதுச்சேரிக்கு ஐகோர்ட் உத்தரவு
2022-11-11@ 00:02:56

சென்னை: புதுச்சேரியில் அரசு பணி நியமனங்கள் விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும் என்று உத்தரவாதம் அளித்து மனுதாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 10 ஆயிரம் பேரை சட்டவிரோதமாகவும், விதிகளுக்கு முரணாகவும் பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறி, பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதுச்சேரி பொதுப்பணி துறையில் எத்தனை பேர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களுடன் நேரில் ஆஜராகுமாறு புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி பொதுப்பணித்துறை செயலாளர் குமார் நேரில் ஆஜரானார். புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2016ம் ஆண்டு முதல் இதுவரையில் எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அரசுப் பணி நியமனங்கள் முழுக்க முழுக்க விதிகளை பின்பற்றியே மேற்கொள்ளப்படும் என்று உறுதி தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விதிகளை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று உத்தரவாதம் அளித்து மனுதாக்கல் செய்யுமாறு புதுச்சேரி அரசுக்கு அறிவுறுத்தி விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!