ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கயல்விழி தலைமையில் நடைபெற்றது..!!
2022-11-09@ 17:23:41

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், இத்துறையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள் உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்குதல், வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டாக்களை வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உரிய முறையில் அமல்படுத்துதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்த அமைச்சர், இப்பணிகளின் பயன் அதிகளவில் மக்களை விரைந்து சென்றடைவதை உறுதி செய்திடுமாறு வலியுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு ஜவகர், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் திரு. எஸ். பழனிசாமி, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் திரு த.ஆனந்த், இ.ஆ.ப., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் திரு.கே.எஸ்.கந்தசாமி , இ.ஆ.ப., சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் உதவி காவல்துறை தலைவர் திருமதி. பி.ஆர்.வெண்மதி, இ.கா.ப., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு.ச.அண்ணாதுரை, ம.தொ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்
உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!