ஓபிசி தனி கணக்கெடுப்பு நடத்த வழக்கு ஒன்றிய அரசின் கொள்கை முடிவை மக்களின் நலனுக்காக மாற்றலாமே?: ஐகோர்ட் கிளை கேள்வி
2022-11-09@ 00:52:44

மதுரை: ஓபிசி தனி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய வழக்கில், அரசின் கொள்கை முடிவை பொதுமக்களின் நலனுக்காக மாற்றலாமே என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த தவமணிதேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2020ல் தாக்கல் செய்த மனுவில், ‘‘ ேதசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரையின்படி வரும் 2021ல் நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) தனி கணக்கெடுப்பையும் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஒன்றிய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி ஆஜராகி, ‘‘மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி பிரிவின் கீழ் தனியாக கணக்கெடுப்பு நடத்துவது என்பது ஒன்றிய அரசின் கொள்கை ரீதியானது. கொள்கை ரீதியான முடிவெடுக்காமல் தனி கணக்கெடுப்பு நடத்த இயலாது. கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி கணக்கெடுப்பை நடத்த முடியாது என எவ்வாறு கூற முடியும்? கொள்கை முடிவுகள் என்பது பொதுமக்களின் நலனுக்கானவை. எனவே, பொதுநலன் கருதி கொள்கை முடிவை மாற்றலாமே’’ என்றனர். பின்னர், ஒன்றிய அரசு தரப்பில் கூடுதல் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
மேலும் செய்திகள்
இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை குமரி பாதிரியார் பாளை மத்திய சிறைக்கு மாற்றம்: ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாம்
படிக்காததை கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி
புதுச்சேரியில் நீர்தேக்க தொட்டி மீது ஏறி அரசு ஊழியர்கள் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்: பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்
கீழடி அருங்காட்சியகம் மெக்சிகோ தூதர் வியப்பு: பழம்பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்
எண்ணெய் கசிவு பாதிப்பை ஆய்வு செய்யக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மக்கள் செல்ல விடாமல் கட்டுப்பாடுகள் கொடநாடு பாதை பிரச்னை எஸ்டேட் வக்கீல் விடுதலை: 16 ஆண்டு வழக்கில் குன்னூர் நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி