SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலத்தில் சட்ட விரோதமாக குழந்தையை விற்பனை செய்ய முயற்சி: 3 பேர் கைது

2022-11-08@ 16:59:10

சேலம்: சேலத்தில் சட்ட விரோதமாக குழந்தையை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர். குழந்தையை விற்பனை செய்ய முயற்சியில் இடைத்தரகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் விற்பனை மற்றும் கருமுட்டை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கைதான இடைத்தரகருக்கு தொடர்பு என தகவல் வெளியாகியுள்ளது. திருச்செங்கோட்டை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 4 நாட்கள் முன்பு பிறந்த பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை பேரம் பேசி விற்க முயற்சி செய்துள்ளனர்.

குழந்தையின் உறவினர்களே ரூ.3 லட்சம் பேரம் பேசி சேலத்திற்கு விற்பனைக்காக எடுத்து வந்துள்ளார். குழந்தையை விற்பனை செய்ய ரூ.3 லட்சம் பேரம் பேசி குழந்தையின உறவினர் வளர்மதி மற்றும் அவரது கணவன் மதியழகன் ஆகியோர் குழந்தையை சேலத்துக்கு எடுத்து வந்துள்ளனர். குழந்தையை வாங்கி செல்வதற்காக ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர் சேலத்திற்கு வந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ள நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்பொழுது குழந்தையை எடுத்து வந்த குழந்தையின் உறவினர்கள் வளர்மதி மற்றும் அவரது கணவன் மதியழகன் மற்றும் குழந்தையை வாங்கி செல்ல வந்த இடைத்தரகர் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் எடுத்துச் சென்று பின்பு அங்கிருந்து குழந்தைகள் மனநல காப்பகத்திற்கு குழந்தை பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. மேலும் இவர்கள் 3 பேர் மீதும் சட்ட விரோதமாக குழந்தையை கடத்தி விற்பனை செய்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்