மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி தரம் தலைமை செயலர் ஆய்வு
2022-11-08@ 01:09:57

தண்டையார்பேட்டை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அர்தூன் சாலையில் உள்ள உருது தொடக்கப் பள்ளியில், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தரம் குறித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து, மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவினை அவரும் சாப்பிட்டு உணவின் தரத்தினை ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, கல்வி துணை ஆணையர் சினேகா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், திமுக கிழக்கு பகுதி செயலாளர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்கும் பொருட்கள் சேவை,வரி மற்றும் மின் வழிச்சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை: சீமான் கடும் கண்டனம்..!
சென்னையில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
பின்தங்கிய பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுகொள்ளப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி