தென் கொரியா, அமெரிக்காவை தாக்கவே ஏவுகணை சோதனை: வட கொரியா திடுக் தகவல்
2022-11-08@ 00:45:50

சியோல்: ‘தென் கொரியா, அமெரிக்காவை குறி வைத்தே ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது’ என்ற வட கொரியா திடுக் தகவலை கூறி உள்ளது. வடகொரியாவின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் அமெரிக்கா, தென்கொரிய படைகள் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது. கடந்த வாரம் வடகொரியா ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசியது. இந்த ஏவுகணைகள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையை நோக்கி வீசப்பட்டன. அதில் ஒரு ஏவுகணை தென் கொரிய கடலோரத்தில் விழுந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில்,வட கொரிய ராணுவம் நேற்று தெரிவிக்கையில்,‘ தென் கொரியா, அமெரிக்கா விமான தளங்கள், கட்டுப்பாட்டு மையங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிதான் ஏவுகணை சோதனை. இதில் அணு ஆயுதங்களும் அடங்கும். எதிரி நாடுகளின் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகள் தொடருமானால் கொரிய மக்கள் ராணுவம்(கேபிஏ) ஈவு இரக்கமின்றி அதற்கான பதிலடி கொடுக்கும்’ என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க, தென் கொரிய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘‘ வட கொரியா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கிம் ஜோங் உன் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும்’’ என்று எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் இருந்து போப்பாண்டவர் இன்று டிஸ்சார்ஜ்
டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு வரலாற்றில் இருண்ட நாள்: நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி கடும் கண்டனம்
அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சராக இந்திய வம்சாவளி தேர்வு
போட்டியின்றி தேர்வு உலக வங்கி தலைவராக அஜய் பங்கா
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!