சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 648 இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் முழுவதும் வெளியேற்றம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்
2022-11-08@ 00:25:54

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 648 இடங்களில் தேங்கி இருந்த மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். இது குறித்துஅவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 71 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில், மழை நீர் தேங்கியதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 29.10.2022 முதல் 05.11.2022 முடிய மொத்தம் 2,83,961 உணவு பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 648 இடங்களில் தேங்கி இருந்த மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது.
அதன்படி இன்று சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9ம் தேதி (நாளை) பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9ம் தேதி அன்று இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும். அதனால் வருகிற 10ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
* சென்னை குடிநீர் ஏரியின் நிலவரம்
செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி. தற்போது 20.61 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்துக்கு 19 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 713 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி. தற்போது 18.73 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 165 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 292 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது என்று வருவாய் துறை அமைச்சர் கூறினார்.
Tags:
Chennai Municipal Corporation 648 places rain water drainage Minister KKSSR Ramachandran சென்னை மாநகராட்சி 648 இடங்களில் மழை நீர் வெளியேற்றம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்மேலும் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
கடை வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் கட்டிடம் கட்ட தடையின்மை சான்று: பேரவையில் மதுரவாயல் எம்எல்ஏ கணபதி வலியுறுத்தல்
ராகுல்காந்தியின் எம்.பி பதவியை பறித்ததற்கு எதிர்ப்பு கமலாலயத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி