கொளத்தூர் தொகுதியில் நான்காவது நாளாக பொது மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு..!!
2022-11-07@ 14:30:10

கொளத்தூர் தொகுதியில் நான்காவது நாளாக பொது மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் அப்போலோ மருத்துவமனை மற்றும் கற்பக விநாயகா மருத்துவமனையின் மூலமாக கட்டணமில்லா பொது மருத்துவ முகாம்கள் கடந்த நான்கு நாட்களாக நடத்தப்படுகின்றன. இன்று கொளத்தூர், ஒத்தவாடை தெரு, கே.சி.கார்டன், பாலவாயில் தெரு எம்.எம். திருமண மண்டபம், பாரத் ராஜிவ் காந்தி நகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பொது மருத்துவ முகாம்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்த பொது மருத்துவ முகாம்களில் இசிஜி, ரத்த பரிசோதனை, கண்சிகிச்சை, பல்சிகிச்சை மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் வடசென்னை, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியாராஜன், பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப்.வ.முரளிதரன், எ.நாகராசன், மண்டல குழுத்தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் பீ. தாவுத், பி.அமுதா, வட்டகழகச் செயலாளர்கள் ஜார்ஜ் குமார், பி.டி.சி. ரவி, பி. அதிபதி, முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
அரசு பேருந்து மோதி மகன் கண் முன் தாய் பரிதாப பலி
கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து மை பூசி அழிப்பு: மர்ம நபருக்கு வலை
கோயம்பேட்டில் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் ரகளை
துப்பு துலங்காத கொலைகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் காவல் படை: சென்னை கமிஷனர் அதிரடி
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு
மூத்த குடிமக்கள் வசதிக்காக வேளச்சேரி பேபி நகரில் ரேஷன் கடை: அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!